இந்தியா, பிப்ரவரி 15 -- Vishnu Manchu: கண்ணப்பா படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்த பிரபாஸ்ஸின் செயலால், அவரின் புது படத்தில் நடிக்க நடிகர் விஷ்ணு மஞ்சு ஆர்வம் காட்டுகிறார்.

பான் இந்தியா 'ரெபெல் ஸ்டார்' எனப் புகழப்படுபவர், பிரபாஸ். இவர் தொடர் படங்களில் நடித்துக்கொண்டு தற்போது பிஸியாக உள்ளார்.

தற்போது தெலுங்கு இயக்குநர் மாருதி இயக்கும் 'தி ராஜா சாப்' மற்றும் இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இருப்பினும், அர்ஜூன் ரெட்டி, அனிமல் ஆகியப் படங்களை இயக்கி பிரபலமடைந்த இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வெளி வரவிருக்கும் ''ஸ்பிரிட்'' படத்திற்கான மோகம் ரசிகர்கள் மத்தியில் வேறு லெவலில் உள்ளது.

'ஸ்பிரிட்' படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே படம் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது...