இந்தியா, மார்ச் 21 -- தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்து வரும் விஷால், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுசெயலாளராகவும் இருந்து வருகிறார். இவரது நடிப்பில் உருவாகியிருந்த மதகஜராஜா இந்த ஆண்டு பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்து ரசிகர்களை கவர்ந்து ஹிட்டானதுடன் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை அள்ளியது. சுந்தர் சி - விஷால் கூட்டணியில் கடந்த 2013ஆம் ஆண்டிலேயே உருவான இந்த படம் பைனான்ஸ் பிரச்னை காரணமாக கிடப்பில் இருந்து வந்த நிலையில், தற்போது பிரச்னைகள் அனைத்து தீர்ந்து வெளியானது.

12 ஆண்டுகளுக்கு முன்னர் வரவேண்டிய படமாக இருந்தாலும் தற்போது படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட்டாகி இருப்பது விஷாலை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. படம் ரூ. 50 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளியது. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அஞ்சலி, வரலட்சுமி என இரண்டு ஹீரோயின்க...