இந்தியா, ஏப்ரல் 30 -- குரு பகவானின் மூன்று நட்சத்திரங்களில் ஒன்றான விசாகம் நட்சத்திரத்தின் முதல் மூன்று பாதங்கள் துலாம் ராசியிலும், நான்காவது பாதம் விருச்சிகம் ராசியிலும் உள்ளது.

விசாகம் நட்சத்திரத்தின் முதல் மூன்று பாதங்கள் சுக்கிரன் ராசியான துலாம் ராசியில் விழுவதால் இந்த நட்சத்திரக்காரர்கள், பார்ப்பதற்கு படபடப்பாக இருப்பார்கள், விசாகம் குருவின் நட்சத்திரம் என்பதால் வேதம், சாஸ்திரங்களில் ஈடுபாடும், தெய்வ பக்தியும் இருக்கும்.

உறவினர்களிடம் அன்பாக நடந்து கொள்ளும் பண்பை பெற்ற இவர்களின் பேச்சு சாதூர்யமானதாக இருக்கும். இவர்களுக்கு சில இடங்களில் கர்வம் வெளிப்பட்டாலும், எப்போதும் எளிமையாக பேசுவார்கள்.

இவர்களுக்கு வரும் கனவுகள் பலிக்க கூடியதாக இருக்கும், இவர்களின் வாக்குகள் பலிதம் ஆகும். இவர்களுக்கு கல்வி அறிவு குறைவாக கூட இருக்கலாம் ஆனால் உல...