இந்தியா, பிப்ரவரி 3 -- புதிய மன்னர்கள் படத்தில் ரஹ்மானுடைய கணிப்பு 100 விழுக்காடு உண்மை என்றும்; நான் கேட்கல தவறு செய்திட்டேன் என்றும் இயக்குநர் விக்ரமன் தனது வருத்தத்தை பதிவுசெய்துள்ளார்.

இதுதொடர்பாக ரெட் நூல் யூட்யூப் சேனலுக்காக 2025ஆம் ஆண்டு, பிப்ரவரி 1ஆம் தேதி இயக்குநர் விக்ரமன் அளித்த பேட்டியின் தொகுப்பினைக் காணலாம்.

எங்களுக்குள் ஒத்த அலைவரிசை செட் ஆகிடுச்சு. எனக்கு என்ன பிடிக்கும் என்று அவங்களுக்குத் தெரியும். அவங்ககிட்ட என்ன மாதிரி வாங்கலாம்ன்னு எனக்கும் தெரியும். அதுவே, நான் ரஹ்மான் கூட வொர்க் பண்ணும்போது, நமக்கு இந்த மாதிரி பாடல் வேண்டும் என்று கேட்போம். அவரும் முதல் டியூன்லேயே இம்ப்ரைஸ் செய்திடுவார். நீ கட்டும் சேலை மடிப்புல தான் பாட்டில் எல்லாம், அவர் வேறு ஒரு குத்துப்பாட்டு போட்டிருந்தார். அது எனக்கு அவ்வளவாக இம்ப்ரஸ் ஆகல. அ...