இந்தியா, மார்ச் 27 -- நடிகர்கள் விக்ரம் நடித்த வீர தீர சூரன் மற்றும் மோகன்லால் நடித்த எல்2 எம்புரான் ஆகிய திரைப்படங்கள் மார்ச் 27 -2025 ஆம் தேதியான இன்றைய தினம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டன. இதற்கிடையே, வீர தீர சூரன் படத்தில் முதலீடு செய்த பி4யூ நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தது. அந்த வழக்கில், ஓடிடி உரிமை தங்களுக்கு விற்கப்பட்ட நிலையில், படத்தை ஓடிடியில் விற்கும் முன்னரே படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது.

இதனால் தங்களுக்கு பணநஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது என்று கூறியிருந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து இருக்கிறது. இது தொடர்பான விசாரணை இன்று காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.

வீர தீர சூரன் திரைப்படத்தோடு எம்புரான் திரைப்படமும் வெளியாக இருந்ததால் வீர தீர சூரன் புரோமோ...