இந்தியா, மார்ச் 25 -- பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில், மோகன்லால் நடித்துள்ள 'எல் 2 எம்புரான்' திரைக்கு வரும் மார்ச் 27 அன்று நடிகர் விக்ரமின் 'வீர தீர சூரன்' திரைப்படமும் வெளியாக இருக்கிறது. தற்போது 'வீர தீர சூரன்' பட புரோமோஷனில் இருக்கும் விக்ரமிடம் இந்த மோதல் குறித்து கேட்கப்பட்டது.

மேலும் படிக்க | 'எம்புரானை பான் இந்தியா படம் என சொல்வது நோக்கமல்ல.. அதுவாகவே நடந்துவிட்டது'- மோகன்லால்

இது குறித்து பேசிய விக்ரம், ' எம்புரான் படத்துடனான மோதலைப் பற்றி எனக்கு கவலையில்லை; அந்தப்படம் நிச்சயமாக பெரிய சாதனைகளை படைக்கும் என்று நம்புகிறேன். மலையாள சினிமா நல்ல கதையம்சம் கொண்ட கதைகளை படங்களாக உருவாக்குவதில் பெயர் பெற்றது.

இப்போது வந்திருக்கும் எம்புரான் படம் பெரிய பான்-இந்தியாவாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இது ஒரு பெரிய படமாக இருக்க வேண...