இந்தியா, ஜனவரி 26 -- Vijay Sethupathi - நடிகர் மணிகண்டன் நடித்த குடும்பஸ்தன் என்னும் படம் ஜனவரி 24ஆம் தேதி ரிலீஸாகியிருக்கிறது. இந்தப் படத்தின் புரொமோஷன் தொடர்பாக நடிகர் மணிகண்டன் பல்வேறு ஊடகங்களில் பேட்டி கொடுத்து வருகிறார்.

அவ்வாறு டூரிங் டாக்கீஸ் ஊடகத்துக்கு நடிகர் மணிகண்டன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதின் தொகுப்பினைக் காணலாம்.

அதில், ''விஸ்வாசம் படத்தின் கதையில் பணியாற்றியது அஜித்துக்கு தெரியுமா?

ஆமா.. ஆமா. நான் டப்பிங்கில் அஜித் சாரை பார்த்தேன். சிவா சார் என்னை அஜித் சார்கிட்ட, இவர் தான் சார், நம்மைப் படத்துக்கு வசனம் எழுதினார்னு அறிமுகப்படுத்தி வைச்சார். ரொம்ப இடங்களில் உங்கள் வசனங்கள் பிடிச்சிருந்ததுன்னு சொன்னார். அடுத்து உங்களை எங்கேயோ பார்த்திருக்கேன்னு சொன்னார். உடனே, சிவா சார், இவர் தான் சார் விக்ரம் வேதாவில் ஒரு போலீஸ் ரோ...