இந்தியா, பிப்ரவரி 4 -- Vijayakanth: 'புலன் விசாரணை' திரைப்படம் வெளியாகி 35 வருடங்கள் நிறைவடைந்த நிலையில், அப்படத்தின் இயக்குநர் ஆ.கே. செல்வமணி அந்தப்படத்தின் அனுபவங்கள் குறித்து கலாட்டா யூடியூப் சேனலுக்கு அண்மையில் பேசி இருக்கிறார்.

அந்தப்பேட்டியில் அவர் பேசும் போது ' புலன் விசாரணை திரைப்படத்துடன், ரஜினி சாரின் படமும் ரிலீஸ் ஆனது. ஆனால், அப்போது எனக்கு அது குறித்தான எந்த பயமும் இல்லை. அது பொங்கல் பண்டிகை வேறு; பொங்கல் அன்று முன்பெல்லாம் 10 படங்கள் கூட ரிலீஸ் ஆகும். அதனால், ரஜினி சாருக்கு 60 தியேட்டர்கள் கொடுக்கிறார்கள் என்றால், எங்களுக்கு ஒரு 50 தியேட்டர்கள் கிடைக்கும். அந்த சமயத்தில் சிறுபட்ஜெட் படங்களையும் ரிலீஸ் செய்யலாம், பெரிய பட்ஜெட் படங்களையும் ரிலீஸ் செய்யலாம். சூழ்நிலை நன்றாக இருந்தது.

இதற்கிடையே பட ரிலீஸிற்கு முன்னதாக, விஜயகாந...