இந்தியா, மார்ச் 28 -- குருவி படம் மூலம் ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு தேங்காய் உடைத்து தொடங்கி வைத்தது யார் என பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னையில் நடைபெற்ற தவெக பொதுக்குழு கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை, ஆதவ் அர்ஜூனாவும், பிரதமர் நரேந்திரமோடியை விஜயும் விமர்சனம் செய்து இருந்தனர். இந்த பேச்சுக்கு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை பதிலடி கொடுத்து உள்ளார்.

மேலும் படிக்க:- Annamalai vs Adhav Arjuna: 'அண்ணாமலையை திமுக விலைக்கு வாங்கிவிட்டது' தவெக பொதுக்குழுவில் ஆதவ் அர்ஜூனா ஆவேச பேச்சு!

தவெக பொதுக்குழு கூட்டத்தில் விஜய், "ஒரே நாடு ஒரே தேர்தல் தொடங்கியபோதே உங்கள் திட்டம் புரிந்துவிட்டது. தமிழ்நாட்டை கவனமாக கையாளுங்கள், பலருக்கு தண்ணீர் காட்டிய மாநிலம் இது," என பிரதமர் மோடியை விமர்சித்திருந்தார். இதற்கு...