இந்தியா, ஜனவரி 30 -- தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய் சேதுபதி. தமிழ் தவிர தெலுங்கு, இந்தி சினிமாக்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தோன்ற சின்னத்திரையிலும் அடியெடுத்து வைத்துள்ளார்.

இதையடுத்து மதுரையில் நடந்த வருமான வரித்துறையினர் நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி, பான் கார்டுகான இணையத்தளத்தில் தமிழ் மொழியையும் சேர்க்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார். இதை செய்வதால் ஆங்கிலம் அல்லது இந்தி மொழிகள் தெரியாத மக்கள் எளிதில் அணுக முடியும் எனவும் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக விஜய் சேதுபதி பேசியதாவது, "நான் படிப்பை முடித்துவிட்டு ஒரு சார்ட்டெட் அக்கவுண்டன்டாக பணியாற்றியுள்ளேன். அரசு தொடர்பான தகவல்களைப் புரிந்துகொள்வது சவாலான விஷயம். வருமான வர...