இந்தியா, பிப்ரவரி 12 -- Vijay Antony: 'இயக்குனர் இமயம்' பாரதிராஜாவின் அறிமுக நாயகன் கண்ணனை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? 'காதல் ஓவியம்' படத்தின் மூலம் மறக்க முடியாத நடிகராக அறியப்பட்டவர் மூத்த நடிகர் கண்ணன். இவர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் 'சக்தி திருமகன்' படத்தில் அழுத்தமான கதாபாத்திரமொன்றில் கமிட் செய்யப்பட்டு இருக்கிறார்.இதன் மூலம் மீண்டும் திரைத்துறையில் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார். அவரது கம் பேக் இந்த படத்திற்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது என்று படக்குழு தெரிவித்து இருக்கிறது.

மிகவும் புகழப்பட்ட படைப்புகளான அருவி மற்றும் வாழ் படத்தின் இயக்குநரான அருண் பிரபு இயக்கும் 'சக்தி திருமகன்' படம், குடும்ப உறவுகள், அதிரடி சண்டைகாட்சிகள் மற்றும் எமோஷனல் நிறைந்த ஒரு ஜனரஞ்சக படமாக உருவாகிறது. இந்த படம் விஜய் ஆண்டனியின் சினிமா வாழ்க...