இந்தியா, பிப்ரவரி 8 -- அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பழைய பதிவை, ரீட்வீட் செய்து விஜய் ரசிகர்கள் மற்றும் விஜய் கட்சியினர் கிண்டல் அடித்து வருகின்றனர்.

நடிகர் விஜய் தமிழ் சினிமா மட்டுமல்லாது, தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகராக இருக்கிறார். ஒரு படத்தில் நடிப்பதற்காக ரூ. 100 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார். இந்நிலையில் பத்து ஆண்டுகளுக்கு முன், கடந்த விஜய் ரசிகர்கள் சங்கம், விஜய் மக்கள் இயக்கமாகப் பரிணமித்தது. மேலும், 2020ஆம் ஆண்டு நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சார்ந்த உறுப்பினர்கள், விஜய் மக்கள் இயக்கம் என்னும் பெயரைப் பயன்படுத்தி சுயேச்சையாக, தேர்தலில் களம் கண்டுவென்றார்கள்.

மேலும் சமீப காலமாக விஜய்யின் அறிவுறுத்தலின்படி, அவரது அரசியல் பிரவேசத்திற்காக, விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், இலவச உணவு வி...