இந்தியா, ஏப்ரல் 9 -- மக்களிடமும், மாணவர்களிடம் திமுக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும்; மீண்டும் மீண்டும் நீட் தேர்வு அரசியல் மோசடி செய்யும் திமுக தலைமை மக்களிடமும் மாணவர்களிடமும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என த.வெ.க தலைவர் விஜய் கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூறுகையில், ''ஆட்சிக்கு வருவதற்காக ஒரு பெரும் பொய், ஆட்சிக்கு வந்ததும் அதைவிட இன்னும் மிகப்பெரிய பொய் என்பதே தி.மு.க. தலைமையின் அறமற்ற அரசியல்.

பொய்வேடம் தரிக்கும் கபட நாடகத் தி.மு.க. தலைமையின் பொய்முக வரலாறு, அன்றில் இருந்து இன்றுவரை நில்லாமல் நீள்கிறது.

எப்படியும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக நூற்றுக்கணக்கானப் பொய்களின் பட்டியலைத் தேர்தல் அறிக்கையாக 2021 தேர்தலின்போது(ம்) வெளியிட்டது.

அப்பட்டியலின் முக்கியப் பொய்களில் ஒன்றுதான் ...