இந்தியா, பிப்ரவரி 6 -- நடிகர் அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் இன்று வெளியான திரைப்படம் 'விடா முயற்சி'. ' துணிவு ' படத்திற்கு பிறகு, இரண்டு ஆண்டுகளுக்கு அஜித் நடிப்பில் இந்த படம் வெளியாக இருந்ததால், இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.

காலையில் இருந்தே அஜித் ரசிகர்கள் நாடு முழுக்க இருக்கும் பல்வேறு திரையரங்குகளில் கொண்டாட்டத்தை முன்னெடுத்து வந்தனர். அந்த கொண்டாட்டத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்த நடிகர்களும், பணியாற்றிய கலைஞர்களும் கலந்து கொண்டனர்.

அந்த வகையில், சென்னையில் உள்ள வெற்றித் திரையரங்கில் நடிகை த்ரிஷா, ரெஜினா, அனிருத் உள்ளிட்டோர் ரசிகர்களுடன் இணைந்து படம் பார்த்தனர். இந்த நிலையில் அனிருத் வந்த காருக்கு அபராதம் போடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், அதன் உண்மை...