இந்தியா, பிப்ரவரி 6 -- அஜித்குமார் ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்து வந்த விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் இன்று (பிப்ரவரி 6) வெளியாகியுள்ளது. படத்தின் ரிலீஸை அஜித் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் படத்தின் முதல் ஷோ காலை 9 மணிக்கு தொடங்கிய நிலையில், அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகாவில் அதிகாலை காட்சியே திரையிடப்பட்டது. விடாமுயற்சி படம் சிறப்பாக இருப்பதாக அஜித் ரசிகர்கள் கருத்துகளை பகிர்ந்து வரும் நிலையில், சமூக வலைத்தளங்களில் கலவையான விமர்சனங்கள் பகிரப்பட்டு வருகிறது.

முன்னதாக, விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியாவதாக இருந்த நிலையில், ரிலீஸ் தள்ளி வைக்கப்படுவதாக படத் தயாரிப்பாளர்கள் அறிவித்தனர். இதற்கான காரணமும் குறிப்பிடவில்லை.

இதற்கிடையே மகிழ் திருமேணி இயக்கத்தில் உருவாகி இருக்க...