இந்தியா, பிப்ரவரி 6 -- VidaamuyarchiFDFS - உலகமெங்கும் விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6ஆம் தேதியான இன்று ரிலீஸ் ஆனதைத் தொடர்ந்து, அதை முதல் நாள் முதல் காட்சி ஆந்திராவில் அவரது ரசிகர்கள் அஜித் கொடியைக் கொண்டு வந்து ஆர்ப்பரித்துள்ளனர். இச்சம்பவம் வைரல் ஆகியுள்ளது.

நடிகர் அஜித் 'துணிவு' படத்திற்குப் பின் நடித்து திரையரங்குகளில் வெளியாகும் படம், விடாமுயற்சி. இப்படத்தை லைகா புரொடக்‌ஷன் தயாரித்து இருக்கிறது. இப்படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இப்படத்தில் நடிகை திரிஷா, ஜி, கிரீடம், மங்கத்தா, என்னை அறிந்தால் ஆகியப் படங்களுக்குப் பின் நடிகர் அஜித் குமாருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா, அர்ஜூன், பிக்பாஸ் தமிழ் புகழ் ஆரவ் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர்....