இந்தியா, பிப்ரவரி 6 -- Vidaamuyarchi Review : துணிவு திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் அஜித் நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியிருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இந்தத் திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை இங்கே பார்க்கலாம்.

அர்ஜுன் ( அஜித்) பிரபல நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கும் கயலுக்கும் ( த்ரிஷா) இடையே நடந்த சந்திப்பு இருவரையும் காதல் கொள்ள வைக்க ஒரு கட்டத்தில் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். நன்றாக சென்று கொண்டிருந்த அவரது வாழ்க்கையில் காயலுக்கு இன்னொருவர் மீது ஈ...