இந்தியா, பிப்ரவரி 6 -- Vidaamuyarchi Collection Prediction: நடிகர் அஜித் 'துணிவு' படத்திற்குப் பின் நடித்து திரையரங்குகளில் வெளியாகும் படம், விடாமுயற்சி. இப்படத்தை லைகா புரொடக்‌ஷன் சார்பில் சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரித்து இருக்கிறார். இப்படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் விடாமுயற்சி படம் இன்று(பிப்.6) உலகெங்கும் வெளியாகி இருக்கும் நிலையில் பல்வேறு இடங்களில் படம் பார்த்த ரசிகர்கள், படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

இப்படத்தில் நடிகை திரிஷா, ஜி, கிரீடம், மங்கத்தா, என்னை அறிந்தால் ஆகியப் படங்களுக்குப் பின் நடிகர் அஜித் குமாருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா, அர்ஜூன், பிக்பாஸ் தமிழ் புகழ் ஆரவ் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர். ...