இந்தியா, பிப்ரவரி 8 -- Vidaamuyarchi Box Office Collection Day 2: இயக்குநர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் அஜித் குமார் மற்றும் திரிஷா கிருஷ்ணன் நடித்து பிப்ரவரி 6ஆம் தேதி வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியான திரைப்படம், விடாமுயற்சி.

இந்தப் படம் அதன் தொடக்க நாளில் நன்றாக ஓடியது. Sacnilk இணையதளத்தின் கூற்றுப்படி, படம் அதன் இரண்டாவது நாளில் இந்தியாவில் சுமார் 8.75 கோடி ரூபாய் நிகர வசூலித்தது.

இது முதல் நாளை ஒப்பிடும்போது வசூலில் பெரும் சரிவு ஆகும்.

விடாமுயற்சி படம் இந்தியாவில் முதல் நாளில் ரூ.26 கோடி வசூல் செய்ததாகவும், குறிப்பாக, தமிழில் ரூ.25.5 கோடியும், தெலுங்கில் ரூ.0.5 கோடியும் வசூலித்ததாக Sacnilk இணையதளம் தெரிவிக்கிறது. இரண்டாவது நாளில் விடாமுயற்சி இந்தியாவில் 8.75 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் 8.4 கோடி வசூலி...