இந்தியா, பிப்ரவரி 7 -- மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் விடாமுயற்சி மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிப்ரவரி 6ஆம் தேதி (நேற்று) வெளியாகியுள்ளது. சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து வெளியாகி இருக்கும் அஜித்குமாரின் இந்த படத்தை ரசிகர்கள் மிகுந்த ஆராவாரத்துடன் வரவேற்றனர்.

1997இல் வெளியான ஹாலிவுட் படமான பிரேக்டவுன் படத்தின் தழுவலாக விடாமுயற்சி படம் உருவாகியுள்ளது. அத்துடன், லாஸ்ட் சீன் அலைவ் என்ற மற்றொரு ஹாலிவுட் படத்தின் கதை, காட்சிகளும் பட்டி டிங்கரிங் செய்து விடாமுயற்சி படம் உருவாக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன.

அஜித்குமார் மற்ற படங்களை போல் விடாமுயற்சி படத்துக்கும் நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது. இருப்பினும் அவரது முந்தைய படமான துணிவு முதல் நாள் வசூலை முந்தவில்லை என பாக்ஸ்...