இந்தியா, பிப்ரவரி 5 -- Vidaamuyarchi: அஜித் குமார்- மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் நாளை பிப்ரவரி 6ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், தற்போது இந்தப் படத்தின் 3வது சிங்கிளை படக்குழு வெளியிட்டுள்ளது.

தனியே எனும் இந்த பாடலை அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து பாடியுள்ளார். இந்தப் பாடலை லைகா புரொடக்ஷன்ஸ் அதன் எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளது. நாளை படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், கொண்டாட்டத்திற்கு தயாராகி வரும் ரசிகர்களை குஷிப்படுத்தும் நோக்கில் தற்போது 3ம் பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு.

அஜித் த்ரிஷா நடித்துள்ள இந்தப் படத்தில் த்ரிஷாவை கடத்தல் கும்பல் கடத்திச் செல்வது போன்றும், அவரை அஜித் மீட்பது போன்றும் கதை அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில், மனைவி த்ரிஷாவை நினைத்து அஜித் வருந்தும் விதமாக இந...