இந்தியா, பிப்ரவரி 7 -- அஜித்தின் விடாமுயற்சி ரிலீஸை ரசிகர்கள் ஆட்டம், பாட்டம் என மிகுந்த ஆராவரத்துடன் கொண்டாடினர். படம் திரையிட்ட அனைத்து திரையரங்களுகளும் ரசிகர்களின் ஆரவாரத்தால் திருவிழா போல் காட்சியளித்தது.

பல்வேறு பகுதிகளில் விடாமுயற்சி ரிலீஸ் கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்களுடன், விஜய் ரசிகர்களும் இணைந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் திருநெல்வேலி புகழ் பெற்ற ராம் சினிமாஸில் விடாமுயற்சி கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள், விஜய் ரசிகர்களை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊர்களிலும் ஐகானிக் திரையரங்குகள் இருந்து வருகின்றன. இந்த திரையரங்குகளில் பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ரசிகர்களால் மிக பெரிய அளவில், பிரமாண்டமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி திருநெல்வேலி ராம் சினிமாஸில் காலை 9 மணிக...