இந்தியா, ஜனவரி 29 -- ஜெய் பீம் பட இயக்குநர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையடுத்து வேட்டையன் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக ஆந்திரா மாநிலம் கடப்பாவுக்கு சென்றுள்ளார் ரஜினிகாந்த். இங்குதான் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. கடப்பாவில் ஷுட்டிங் முடிவடைந்து விட்டால் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இறுதிகட்ட படப்பிடிப்பில் மலையாள நடிகர் ஃபகத் பாசில், தெலுங்கு நடிகர் ராணா டகுபதி ஆகியோரும் பங்கேற்க உள்ளார்களாம். ரஜினிகாந்த், ஃபகத் பாசில், ராணா ஆகியோர் இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.

இந்த படப்பிடிப்பு கடப்பா மற்றும் அதனை சுற்றியுள்ள ப...