இந்தியா, பிப்ரவரி 15 -- சுக்கிரன், கடந்த 12ஆம் தேதி மகர ராசியில் சஞ்சரிக்கத் தொடங்கியுள்ளார்.

சுக்கிரனின் பெயர்ச்சியால் புத்திசாலித்தனம், இல்லற வாழ்வு, பொருள் வளம் ஆகியவை மேம்படும். தடைகள் விலகும். இந்த சுக்கிர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.

மேஷம்: இந்த ராசியினருக்கு சுக்கிரப்பெயர்ச்சி, அதிர்ஷ்டமானது. பணி இடத்தில் நற்பெயர் கிட்டும். சீரான ஊதிய உயர்வினைப் பெறுவீர்கள். வாழ்வில் நிறையநாட்களாக வாங்காமல் இருந்த பொருட்களை வாங்குவீர்கள். தொழில் முனைவோருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

சிம்மம்: இந்த ராசியினருக்கு, மிகப்பெரிய நல்ல மாற்றங்கள் கிடைக்கும். வெகுநாட்களாக மனதில் நினைத்துக்கொண்டே இருந்த ஆசை நிறைவேறும். தொழில் சார்ந்த ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள்.

கன்னி: இந்த ராசியினருக்கு சுக்கிரனின் பெயர்ச்சியால் வெ...