இந்தியா, பிப்ரவரி 9 -- வீகன் டயட் என்றால் நனி சைவம் என்று தமிழில் அழைக்கப்படுகிறது. விலங்குகளில் இருந்து இல்லாமல் முற்றிலும் தாவரங்களில் இருந்து கிடைப்பதுதான் இந்த உணவுகள். அதை மட்டுமே சாப்பிடுவதுதான் வீகன் டயட். வீகன் டயட் குறித்து இரண்டு வித கருத்துக்கள் உள்ளது. உலகிலேயே சிறந்த டயட் இதுதான் என்றும், இதை சாப்பிட்டவர்கள்தான் ஜப்பானில் 100 ஆண்டுகள் உயிர் வாழ்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள். வீகன் டயட் சாப்பிடுவதால் எண்ணற்ற பிரச்னைகள் உள்ளது. இதில் அவர்களுக்கு கிடைக்கவேண்டிய பல புரதங்கள் கிடைக்காமல் போகிறது என்றும் கூறுகிறார்கள். இந்த இருவேறு கருத்துக்கள் உள்ள நிலையில் இந்த வீகன் டயட் குறித்து அவர் கூறிய விவரங்களைப் பார்க்கலாம்.

சரிவிகித உணவு என்றால் அதற்கான உலக சுகாதார நிறுவனம் ஒரு அளவீட்டை வைத்திருக்கும். அதில் கார்போட்ரேட், கொழுப்பு, பு...