இந்தியா, பிப்ரவரி 12 -- Veeramani Kannan: இளையராஜா தன்னைப்பற்றி பேட்டிகளில் பெருமையாக பேசுவது குறித்து பாடகர் வீரமணிகண்ணன் சினி உலகம் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, 'இளையராஜா பேட்டிகளில் நான்தான் இசை என்று கூறுவதைக் கண்டு, பலர் என்ன இவருக்கு இவ்வளவு கர்வம் என்ற ரீதியில் விமர்சனம் செய்கிறார்கள். ரஜினி நடித்த எஜமான் திரைப்படம் உங்களுக்கு நினைவிருக்கும். அந்த திரைப்படத்தில் சிந்து பைரவி ராகத்திலேயே ராஜா சார் பல மெட்டுக்களை அமைத்திருப்பார்.

எந்த ஒரு இசையமைப்பாளருமே மெலடியில் மிகவும் ஸ்ட்ராங்காக இருப்பார்கள். ஆனால், ரிதமை பெரிதாக கவனிக்க மாட்டார்கள். காரணம், அது கம்போசிங்கில் கவனத்தை சிதறடித்து விடும் என்பதற்காக.. ஆனால், இளையராஜா சார் அப்படி இல்லை. ஒரு பாட்டை எடுத்துக் கொண்டார் என்றால்,...