இந்தியா, ஏப்ரல் 1 -- Veera Dheera Sooran update: வீர தீர சூரன் திரைப்படம் நடிகர் விகரமிற்கு கம்பேக் திரைப்படமாக மாறி இருக்கிறது. கடுமையாக நெருக்கடிகளுக்கு இடையே கடந்த மார்ச் 27 அன்று மாலை வெளியான இந்தத்திரைப்படம், முதல் காட்சியிலேயே பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றது. இதனால், வார இறுதி நாட்களில் படத்தைப் பார்க்க மக்கள் ஆர்வம் காட்டினர்.

மேலும் படிக்க | எம்புரான் படத்துடன் மோதுவது குறித்து கவலை இல்லை - விக்ரம் பேச்சு

இதனால், வீர தீர சூரன் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. இது தொடர்பான பாக்ஸ் ஆஃபிஸ் விபரங்களை Sacnilk தளம் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, வீர தீர சூரன் திரைப்படம் வெளியான 5 நாட்களில் 23.50 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறது. வாரத்தின் முதல் நாளான நேற்றைய தினம், வீர தீர சூரன் திரைப்படம் 4.35 கோடி...