இந்தியா, மார்ச் 28 -- Veera Dheera Sooran: 'வீர தீர சூரன்' பட வெளியீட்டில் தயாரிப்பு தரப்பிற்குள் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வெடித்த நிலையில், படத்தை 4 வாரங்களுக்கு வெளியிடக்கூடாது நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பின்னர் பேச்சு வார்த்தை நடத்தி, பிரச்சினையை சரிசெய்து படம் வெளியிடப்பட்டது.

இதன் காரணமாக காலையில் இருந்து படத்தைப் பார்க்க காத்திருந்த ரசிகர்கள் மாலை காட்சியில்தான் படத்தைப் பார்க்க நேர்ந்தது. இவ்வளவு தடைகளை தாண்டி வந்திருக்கும் 'வீர தீர சூரன்' படம் எப்படி வந்திருக்கிறது என்பதை பார்க்கலாம்.

மதுரையில் செல்வாக்கு மிக்க பெரியவர் ரவியும் ( பிரித்வி) அவரது மகன் கண்ணனும் ( சூரஜ் வெஞ்சரமூடு) ஊர் திருவிழாவின் போது பிரச்சினை ஒன்றை சந்திக்கிறார்கள். அந்த பிரச்சினையை காரணம் காட்டி, இரண்டு பேரையும் என் கவுன் ...