இந்தியா, பிப்ரவரி 2 -- Vasant Panchami 2025: ஓர் ஆண்டில் 4 நவராத்திரிகளை வகுத்துள்ளனர். அவை, சியாமளா நவராத்திரி, வசந்த நவராத்திரி, வாராஹி நவராத்திரி மற்றும் சாரதா நவராத்திரி. இதில் சியாமளா நவராத்திரி என்பது தை மாத வளர்பிறை நாள்களில் கொண்டாடப்படுவது. குறிப்பாக, சியாமளா நவராத்திரியில் வரும் வசந்த பஞ்சமி மிகவும் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. வட இந்தியாவில் இந்த நவராத்திரியை விசேஷமாகக் கொண்டாடும் வழக்கம் உண்டு.அந்தவகையில், இந்தாண்டு (பிப்ரவரி 2) இன்று வசந்த பஞ்சமியாக வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. முக்கியத்துவம் வாய்ந்த இந்நாளில் கல்வி கடவுளான சரஸ்வதி தேவியை வழிபட்டால் நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த சிறப்பு வாய்ந்த நாளில் சரஸ்வதி தேவி வழிபாடு குறித்தும், வசந்த பஞ்சமியின் சிறப்புகள் பற்றியும் பார்ப்போம்.

கலை, கல்வி மற்றும் ஞான...