இந்தியா, பிப்ரவரி 16 -- Varalaxmi Sarathkumar: நடிகை வரலட்சுமி சினிமாவிலும், திருமண வாழ்க்கையிலும் தன்னை சிறப்பானவளாக நிரூபித்து வரும் சமயத்தில், வரலட்சுமியின் அம்மாவான சாயா தற்போது பாலாவின் வணங்கான் படத்தில் நடித்து, சினிமாவிற்குள்ளும் காலடி வைத்துள்ளார்.

படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியான தருணத்தில் பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனல், வரலட்சுமியின் அம்மா சாயாவிடம் பேட்டி எடுத்தது. அந்தப் பேட்டியில், சாயா, தன் குடும்பம் குறித்து பேசியுள்ளார்.

அந்தப் பேட்டியில், " வரலட்சுமியோட கல்யாண போட்டோ பாக்கும் போது நாங்க அத்தனை பேரும் வருவோட சந்தோஷத்துக்காக ஒன்னா நின்னோம் அது என் நியாபகத்துக்கு வருது. அவளுக்காக நாங்க எங்ககிட்ட இருந்த எல்லா வேறுபாடு, குறைகளை எல்லாம் ஒதுக்கி வச்சு ஒன்னா வந்து நின்னோம். அதுக்கு ஒரே ஒரு காரணம் வருவோட சந்தோஷம் மட்டும் தான...