இந்தியா, மார்ச் 16 -- தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருந்து வரும் நடிகை வரலட்சுமி சரத்குமார், ரியாலிட்டி டிவி ஷோக்களில் ஜட்ஜ் ஆகவும் இருந்து வருகிறார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3 நிகழ்ச்சியில் இடம்பெறும் மூன்று நடுவர்களில் ஒருவராக வரலட்சுமி உள்ளார்.

சினிமா ஷுட்டிங்கில் ஒன்றில் ஆக்சன் காட்சி படமாக்கப்பட்டபோது கட்ட விரலில் வரலட்சுமிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தனது இன்ஸ்டா ஸ்டோரியில் வீடியோ பகிர்ந்திருந்தார் வரலட்சுமி. அதில், தனக்கு ஏற்பட்ட காயத்துக்கு கட்டை விரலில் கட்டு போட்டிருக்கும் வரலட்சுமி, கையில் சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் விரைவில் வழக்கமான பணிக்கு திரும்புவேன் என கூறியுள்ளார்.

மேலும் படிக்க: வரலட்சுமியின் காதலர் நிக்கோலாய் முதல் மனைவி கவிதா யார்?

கடந்த ஆண்டில்...