இந்தியா, மார்ச் 5 -- மன்னர் காலத்தில், கோயில் வழிபாட்டுக்காக விளைநிலத்தின் வரியை நீக்கி அவற்றை கோயில்களுக்கு தானமாக வழங்குவர். நிலத்தின் விளைச்சல் மூலம் வழிபாடு தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு தானம் வழங்கிய சிவன் கோயில் நிலத்தில் திரிசூலக்கல்லும், திருமால் கோயில் நிலத்தில் சங்கு சக்கரம் பொறித்த திருவாழிக்கல்லும் நடுவர்.

இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம், நரிக்குடி திருப்புவனம் சாலையில் திருச்சுழி அருகிலுள்ள உண்டுருமி கிடாக்குளத்தில், சாலையின் இடதுபுறம் இருந்த ஒருங்கமைவு இல்லாத வாமனக்கல்லை, ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, அருப்புக்கோட்டை எஸ்.பி.கே கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் ராஜபாண்டி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது: "உண்டுருமி ...