இந்தியா, ஜனவரி 26 -- டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக மதுரை மாவட்டத்தில் நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், அரிட்டாபட்டியை அடுத்து, வள்ளாலப்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியதாவது:

''ஒன்றிய பாஜக அரசை பொறுத்தவரைக்கும் என்னென்ன கொடுமைகளை மக்களுக்கு விரோதமான செயல்களை செய்து கொண்டிருக்கிறது என உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும். இன்றைக்கும் இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு மாநிலத்தில் இருந்து தலைநகரமாக இருக்கும் டெல்லி நகரத்தை நோக்கி விவசாயிகள் பெரிய பேரணி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். போராட்டம் நடத்தி அதனால் நூற்றுக்கணக்கானவர்கள் இறந்து போய் இருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியும்.

ஆனால் மூன்றே மாதத்தில் உங்கள் வெற்றிக்கான காரணம், தமிழக அரசு காட்டியுள்ள கடுமையான எதிர்ப்பு. மாநில அரசினுடைய அனுமதி ...