இந்தியா, பிப்ரவரி 14 -- காதல் உலகத்தின் உன்னதமான உணர்வு. உலகத்தில் வாழும் மற்ற உயிரினங்களும் காதல் செய்கின்றன. மனிதன் அதன் ஆழத்தை உணர்ந்து செய்கின்றான். காதல் தான் நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. இத்தகைய காதலை கொண்டாடும் தினம் தான் இன்று (பிப்ரவரி 14 ) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. காதலின் ஆழத்தை, அதன் அன்பை அனுபவிக்க காதலித்தால் மட்டுமே கிடைக்கும். இரண்டு நபர்கள் மட்டும் இணைந்து அன்பு செலுத்துவது மட்டும் காதல் அல்ல. நாம் நமது உறவுகளின் மீது வைத்துள்ள அன்பும் காதல் தான். இத்தகைய காதலர் தினம் கொண்டாடப்படும் காரணம் மற்றும் அதன் முக்கியத்துவத்தை இங்கு காண்போம்.

காதலர் தினம் பண்டைய ரோமானிய மரபுகளில் இருந்து தோன்றியதாக கூறப்படுகிறது. மற்றவர்கள் அதை ஒரு கிறிஸ்தவ பாதிரியாரான வேலன்டைன் நினைவாக கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது. புராண...