இந்தியா, ஜனவரி 28 -- Valentines Day: கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, சென்னையின் பல்வேறு இடங்களில், 'மதுரை பையனுக்கு தமிழ் பொண்ணு வேணும்' என்ற போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. சரி, இப்போது எதற்காக இந்த விளம்பரம் என்ற ரீதியில் மக்கள் அதனை கடந்து சென்ற நிலையில், தற்போது அதற்கான பதில் கிடைத்திருக்கிறது.

ஆம், இது ஒரு வெப் தொடருக்கான விளம்பரம். இந்த வெப் தொடர் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. காதலர் தின ஸ்பெஷலாக வெளியாகும் இந்த வெப் தொடரில், தொகுப்பாளர் ஏஞ்சலின் மற்றும் கண்ணா ரவி ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத்தொடரின் மூலமாக ஏஞ்சலின் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார்

தொடரின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை இயக்குநர் மற்றும் நடிகருமான சசிக்குமார் தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். விக்னேஷ் பழனிவேல் இயக்கி இருக்கு...