காரைக்குடி,சிவகங்கை,சென்னை, பிப்ரவரி 14 -- Valentine's day: காரைக்குடியில் உள்ள 100 அடி சாலையில், தனியார் பேக்கரி நிறுவனத்தில் காதலர் தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாங்கல்ய கயிறோடு இந்து முன்னணியினர் திரண்டு வந்ததால், சம்மந்தப்பட்ட விளம்பரம் அகற்றப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 100 அடி சாலையில் உள்ள பெஸ்ட் மம்மி என்கிற பெயரில் தனியார் பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று காதலர் தினம் என்பதால், சம்மந்தப்பட்ட பேக்கரி சார்பில், காதலர்களை கவரும் விதமாக ஆஃபர் ஒன்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இன்று, தங்கள் பேக்கரிக்கு வரும் காதலர்களை வரவேற்கவும், சம்மந்தப்பட்ட பேக்கரி திட்டப்பட்டிருந்தது.

அதன் ஒரு பகுதியாக, தங்கள் கடைக்கு வரும் காதலர்களை ரோசாப்பூ கொடுத்து வரவேற்கவும் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்ப...