இந்தியா, பிப்ரவரி 25 -- Vairamuthu: இயக்குநரும் தயாரிப்பாளரும், பாடலாசிரியருமான கஸ்தூரி ராஜா, பாடலாசிரியர் யுகபாரதியின் மஹா பிடாரி நூற்று இருபது காதல் கவிதைகள் எனும் நூள் வெளியீட்டு விழா தொடர்பான விளம்பர நிகழ்ச்சியை சினிமா விகடன் நடத்தியது. இதில் கலந்து கொண்டு கஸ்தூரி ராஜா பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.

கஸ்தூரி ராஜா மேடைக்கு வந்த பிறகு, பேசிய பாடலாசிரியர் யுகபாரதி, தான் சினிமாவில் பாட்டெழுத வந்ததற்கு மிக முக்கிய காரணமாக கஸ்தூரி ராஜா இருக்கிறார் என்றும், அவருடையை எருக்கங் செடி ஓரம் இருக்கி புடிச்ச மாமா பாடலையும், தூதுவளை எலை அறைச்சு பாடலையும் சிலாகித்து பேசினார். தமிழ் சினிமாவின் பல வெற்றிப் பாடல்களை மண் சார்ந்த படைப்புகளாக எழுதியவர் கஸ்தூரி ராஜா. நான் எள்ளு வய பூக்கலையேன்னு பாடல் எழுத காரணமாக இருந்தததும் அவர் தான் என பெருமை படுத்தி...