இந்தியா, மார்ச் 20 -- தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து வரும் வடிவேலு நாகர்கோவில் நகரில் நடைபெற்ற வருமான வரித்துறை அலுவலகத்தில் அமைக்கப்பட்ட சேவை மைய திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது மேடையில் பொதுமக்களிடம் பேசிய வடிவேலு வருமானவரி கட்டுவதன் அவசியத்தை பற்றி பேசினார்.

விழாவில் வடிவேலு பேசியதாவது, "ஏழை எளிய மக்களுக்கு உள்ள சந்தேகங்களை தீர்ப்பதற்காகத்தான் இந்த சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. நான் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தில் சொல்வது போல வரி வருவாய் தான் இந்த நாட்டின் முதுகெலும்பு. அது உண்மைதான். அதிக வரி இருப்பதால் மக்கள் கஷ்டப்படும் நிகழ்வுகளும் இருக்கிறது.

பொதுமக்கள் தங்கள் வருமான வரி தொடர்பான புகார்களை தைரியமாக வருமான வரித்துறையினரிடம் தெரிவிக்க வேண்டும். மேலும் இத்தகைய நிகழ்ச்சியில் என்னை அழைத்ததற்கு மிகவும் ப...