இந்தியா, பிப்ரவரி 10 -- தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக இருந்து வரும் வடிவேலு, குணச்சித்திர கதாபாத்திரத்திலும், கதையின் நாயகனாகவும் சில படங்களில் நடித்துள்ளார்.

கடவுள் பக்தி, ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவராக வடிவேலு இருந்து வருவரும் பலரும் அறிந்த விஷயமே. அவ்வப்போது பல்வேறு கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்துவதை வழக்கமாக கடைப்படித்து வருகிறார்.

இதையடுத்து குலதெய்வ கோயிலில் அறங்காவலர் நியமித்த விவகாரத்தில் அந்த ஊர் மக்கள் சார்பில் வடிவேலுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது.

மதுரையை சேர்ந்த வடிவேலுவின் குலதெய்வ கோயில் ராமநாதபுரம் மாவட்டம் பரமகுடி அருகே கிராமம் ஒன்றில் உள்ளது. திருவேட்டை உடைய அய்யனார் கோயில் என்று அழைக்கப்படும் வடிவேலுவின் குலதெய்வ கோயிலின் விரிவாக்கம் மற்றும் பல்வேறு பணிகளுக்காக ஏராளமான உதவிகள் அவரது தரப்பில் செய்...