இந்தியா, பிப்ரவரி 23 -- இப்போது பெண்கள் சிறு வயதிலேயே பூப்பெய்திவிடுகிறார்கள். இதனால் மூட்டுவலி, கை-கால் வலி போன்ற பிரச்னைகளால் அவதிப்படுகிறார்கள். 30 வயதை கடக்கக்கூடிய பெண்கள் இடுப்பு வலி மற்றும் கை-கால் வலி பிரச்னைகளால் அவதிப்படுகிறார்கள். கர்ப்பப்பை தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கூறி, கர்ப்பப்பைக்கு வலு சேர்க்கக்கூடியது.

உடைத்த அல்லது முழு கருப்பு உளுந்து - 2 கப்

(வெள்ளை உளுந்து கட்டாயம் எடுக்கக்கூடாது)

கருப்பட்டி - 1 அல்லது ஒன்றரை கப்

பொட்டுக்கடலை - அரை கப்

நல்லெண்ணெய் - முக்கால் கப்

உளுந்தை தண்ணீரில் சேர்த்து நன்றாக அலசி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதை ஒரு தட்டில் கொட்டி நன்றாக வெயில் அல்லது நிழலில் காய வைக்க வேண்டும்.

காய்ந்தவுடன், இந்த உளுந்தை கடாயில் சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும். நல்ல பொன்னிறமானவும், பொட...