இந்தியா, பிப்ரவரி 19 -- UPSC : மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (யுபிஎஸ்சி) சார்பில் நடத்தப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வரும் 21-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஐஏஎஸ், ஐபிஎஸ் குடிமைப் பணிகள் தேர்வு முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வு என 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது. சுமார் 979 காலியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு மே 25ம் தேதி நடைபெற உள்ளது.

முன்னதாக, இத்தேர்வுக்கு கடந்த 11-ஆம் தேதி வரை விண்ணப் பிக்கலாம் என யுபிஎஸ்சி தெரிவித்திருந்து. அதன்பின் கடந்த 18-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக 21-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட் டுள்ளது.

மேலும் படிக்க : 'விஜய் தனியார் சிபிஎஸ்சி பள்ளியை நடத்துகிறார்' பாஜக மாநில தலைவர் அண்ண...