இந்தியா, மார்ச் 4 -- மீன ராசியில் ராகு பகவான் சஞ்சரித்து வரும் நிலையில், நுண்ணறிவைத் தரும் புதன் பகவான் மார்ச் 7ஆம் தேதி சேரவுள்ளதால் கெடுதலைத் தரும் ஜட யோகம் ஏற்பட்டுள்ளது. இதனால் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய ராசிகள் குறித்துக் காண்போம்.

கும்ப ராசியில் சஞ்சரித்து வரும் சூரிய பகவான், வரும் மார்ச் 15ஆம் தேதி மீன ராசிக்குப் பெயர்கிறார். ஆனால், அதற்கு முன், புதன் மீனராசிக்குப் பெயர்ந்து ஜடயோகம் என்னும் துரதிர்ஷ்டத்தை உண்டு செய்கிறார். மீன ராசியில் புதன் - ராகுவின் சேர்க்கையால் மிகுந்த கவனமுடன் இருக்கவேண்டிய ராசிகள் குறித்துக் காண்போம்.

மேஷம்: இந்த ராசியினருக்கு 12ஆம் இல்லமான விரய ஸ்தானத்தில் ராகு மற்றும் புதன் சேர்க்கை நிகழ்கிறது. இந்த காலத்தில் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் உண்டாகும். உங்களிடம் பணத்தைப் பெற்றவர்கள் தருவதில் காலதாமதம் ஏற...