இந்தியா, பிப்ரவரி 1 -- Union Budget 2024: இந்தியாவின் பணவீக்கம் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்

2024 மக்களவைத் தேர்தலுக்கு முன், இன்று(பிப்ரவரி 1) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது நிதியமைச்சராக அவரது ஆறாவது பட்ஜெட்டாகவும், பிரமர் மோடி அரசாங்கத்தின் இரண்டாவது பதவிக்காலத்தில் கடைசி பட்ஜெட்டாகவும் திகழ்கிறது. இந்த பட்ஜெட்டை வெளியிடுவதற்கு முன்பு நிர்மலா சீதாராமன், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்கும் பாரம்பரிய மரபு இருக்கிறது. அதன்படி, நாடாளுமன்றம் செல்வதற்கு முன்பு அவர் குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத்தலைவர் திரெளபதி முர்முவை இன்று சந்தித்தார்.

அதன்பின் சரியாக 11 மணிக்கு, இடைக்கால பட்ஜெட்டை வாசிக்கத்தொடங்கினார். மத்திய நிதி அமைச...