இந்தியா, ஜனவரி 29 -- அதிக நேரம் வேலை, சீரான தூக்கமின்மை என பல காரணங்களால் நமது உடல் கடுமையாக பாதிப்படைகிறது. நம் உடல் பாதிப்பை உடனடியாக பிரதிபலிக்க கூடியது எது என்றால் அது நம் முகம் தான். நம் முகத்தில் ஏற்படும் சிறு மாற்றங்களும் உடலின் இயக்கத்தை பிரதிபலிக்கிறது எனக் கூறலாம். அதிலும் சரியான தூக்கமின்மையால் நம் கண்கள் பாதிக்கிறது. அவ்வாறு பாதிக்கப்படும் போது நம்மை பார்ப்பவர்கள் உன் கண்களுக்கு என்ன ஆச்சு? எனக் கேட்பதுண்டு.

கண்களைச் சுற்றி கருவளையம் உள்ளவர்கள் பேய்களைப் போல பல கேள்விகளையும் கிண்டல்களையும் எதிர்கொள்கின்றனர். கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் என்பது இளைய தலைமுறையினரிடையே சமீபகால ட்ரெண்ட் ஆகி வருகிறது. தூக்கமின்மை, மன உளைச்சல், கணினி, டிவி, மொபைல் போன் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை நீண்ட நேரம் பயன்படுத்துதல், குறிப்பாக இரவில் கண்கள...