இந்தியா, பிப்ரவரி 16 -- Ujjeevanathar: இந்த உலகத்தின் பரம்பொருளாக சிவபெருமான் திகழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. கடவுளுக்கு எல்லாம் கடவுளாக திகழ்ந்து வரும் சிவபெருமான் உலகம் முழுவதும் கோயில் கொண்டு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்கின்றார். தனக்கென உருவம் இல்லாமல் லிங்கத்திருமேனியாக அனைத்து கோயில்களிலும் காட்சி கொடுத்து வருகிறார்.

உலகத்தில் மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன. குறிப்பாக இந்தியாவில் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து சிவபெருமானை வணங்கக்கூடிய எத்தனையோ பக்தர்கள் இன்று வரை இருந்து வருகின்றனர்.

மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கும் பணிகள் தான் நடைபெற்றதாக வரலாற்றில் கூறப்படுகின்றன. மண்ணுக்காக மன்னர்கள் போரி...