இந்தியா, பிப்ரவரி 1 -- உதித் நாராயண் தனது இசை நிகழ்ச்சி ஒன்றில் ரசிகை ஒருவருக்கு முத்தமிட்டது தொடர்பான வீடியோ சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

இந்தியாவின் மிகவும் முக்கியமான பாடகர்களில் ஒருவர் உதித் நாராயண். தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில், பல பாடல்களை இவர் பாடியிருக்கிறார். குறிப்பாக 90 காலக்கட்டங்களில் இவர் பாடிய பாடல்கள் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றன.

பாடல்கள் பாடுவது மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளில் இசைக்கச்சேரியும் நடத்தி வரும் இவர், அண்மையில் இசைக்கச்சேரி ஒன்றை நடத்தினார். அந்த இசைக்கச்சேரியில் அவர் பாடிக்கொண்டிருக்கும் போது அவரிடம் செல்ஃபி எடுக்க பெண் ஒருவர் முன் வந்தார். அதை உதித் நாராயண் அனுமதித்தார்.

இந்த நிலையில் அவருக்கு செல்ஃபி கொடுத்துக்கொண்டிருக்கும் போதே, எதிர்பாராதவிதமாக அந்தப்பெண் உதித்தின...