இந்தியா, நவம்பர் 27 -- நடிகரும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என ஏரளமானோர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் தனது தந்தையும், திமுக தலைவருமான முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தாய் துர்காவை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.

அந்த புகைப்படத்தை வெளியிட்டு, ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "பேரறிஞர் வழியில் மாநில உரிமை காக்க போராடும் முதலமைச்சர்களில் முதல்வர், முத்தமிழறிஞர் வழியில் சமூகநீதி திட்டங்களை செயல்படுத்தும் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் எனது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து பெற்றேன். திமுக தலைவர் அவர்களின் வழியில் மாநில-கழக வளர்ச்சிக்காக உழைப்போம்!" என்று பதிவிட்டுள்ளார்.

இ...