இந்தியா, பிப்ரவரி 4 -- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நான் பதில் சொல்வதே கிடையாது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

சென்னையில் தேசிய மாணவர் படையை சேர்ந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் இருந்து 120க்கும் மேற்பட்ட என்.சி.சி மாணவர்கள் டெல்லியில் நடந்த குடியரசு தினவிழாவில் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளை வென்று உள்ளனர். அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அவர்கள் விமானத்தில் பயணிப்பதற்காக 28 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து டெல்லி அனுப்பினோம். அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து உள்ளோம்.

சென்னை சைதாப்பேட்டையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத் தக்கது. ...