இந்தியா, பிப்ரவரி 17 -- Udhayanidhi Stalin: தற்போது தமிழக துணை முதலமைச்சாரக உள்ள உதயநிதி, கடந்த 2018ம் ஆண்டு ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏஞ்சல் எனும் படத்தில் பணியாற்றி வந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடியாத சூழலில் இவர் மாமன்னன் படத்தில் நடித்ததாகவும், அந்தப் படத்தை கடைசி படமாக அறிவித்ததுடன் தற்போது வரை ஏஞ்சல் படத்தின் மீதமுள்ள காட்சிகளில் நடிக்க வராமல் இருப்பதாகவும் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தார். இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து ராம சரவணன் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கு இன்று, நீதிபதிகள் அனிதா சுமந்த், மற்றும் குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள்...