இந்தியா, பிப்ரவரி 12 -- Udhayam Theatre: தமிழ்நாட்டில் உள்ள மிகவும் பிரபலமடைந்த தியேட்டர்களின் பட்டியலில் நிச்சயம் இடம் பிடிக்கும் பெயர் உதயம் தியேட்டர். சென்னை அசோக் நகரில் அமைந்துள்ள இந்த தியேட்டரை தமிழ்நாட்டில் அறியாதவர்கள் எனயாரும்இல்லை.

இந்த தியேட்டரில் படம் பார்த்தவர்கள், பார்க்காதவர்கள் என அனைவருக்கும் பரிட்சையமான பெயர். இந்த தியேட்டரின் பெயரை தெரிந்துகொள்ள நாம் சென்னைவாசியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

'உதயம் தியேட்டருல என் இதயத்த தொலச்சேன்' என்ற ஒற்றைப் பாடல் போதும், இந்த தியேட்டரின் புகழ் பாட. தமிழ் சினிமாவில் வெளியான எத்தனையோ படங்கள் இந்தத் திரையரங்கில் திரையிடப்பட்டுள்ளது. எத்தனையோ சினிமா வரலாற்றில் இந்த தியேட்டர் தனக்கான பக்கத்தை ஒதுக்கியுள்ளது.

இந்நிலையில், உதயம் தியேட்டர் அடுக்குமாடி குடியிருப்பாக மாற உள்ளது எனக் கூறி ...